வணிகம்

தங்கம் உயர்வு, வெள்ளி குறைவு - இன்றைய விலை நிலவரம்

அனலி

சென்னை: சென்னையில் இன்று (மே 13) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. அதேவேளையில், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

அந்நியச் செலா​வணிக் கையிருப்​பைப் பாது​காக்க உதவும் வகையில், ஓராண்​டுக்கு தங்​கம் வாங்​கு​வதை தவிர்க்​கு​மாறு மக்களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி கடந்த ஞாயிற்​றுக்​கிழமை அறிவுறுத்​தி​னார்.

இந்​நிலை​யில் தங்​கம், வெள்​ளி​யின் வெளி​நாட்டு கொள்முதலைக் கட்​டுப்​படுத்​த​வும் நாட்​டின் அந்​நியச் செலா​வணி கையிருப்பு மீதான அழுத்​தத்​தைக் குறைக்கவும் எடுக்​கப்​படும் முயற்​சிகளின் ஒரு பகு​தி​யாக, தங்​கம் மற்​றும் வெள்ளி மீதான இறக்​குமதி வரியை மத்திய அரசு 6-லிருந்து 15% ஆக உயர்த்தியது. இதன் எதிரொலியாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: மத்திய அரசின் அறிவிப்பு எதிரொலியாக நேற்று (மே 13) தங்கம் விலை ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1070 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,400-க்கும், பவுனுக்கு ரூ.8,560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,23,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நேற்று மாலை தங்கம் விலை சரிவைக் கண்டது. 22 காரட் தங்கம் விலை ரூ.400 குறைந்து ஒரு கிராம் ரூ.15,000-க்கும், பவுனுக்கு ரூ.3,200 குறைந்து ஒரு பவுன் ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (மே14) காலை மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,050-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,20,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,570-க்கும் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,00,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.315-க்கும், ஒரு கிலோ ரூ.3,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடத்தல் அபாயம்: இந்த வரி உயர்​வு, உலகின் இரண்டாவது மிகப் பெரிய தங்​கம், வெள்ளி நுகர்​வோ​ரான இந்​தி​யா​வில் அவற்​றின் தேவையை குறைக்​கக்​கூடும். வர்த்​தகப் பற்​றாக்​குறையைக் குறைக்க உதவக்கூடும்.

கடந்த 2024-ம் ஆண்டு மத்​தி​யில் இந்​தியா வரி​களை குறைத்த பிறகு தங்​கக் கடத்​தல் தணிந்​திருந்த நிலை​யில், தற்​போதைய வரி உயர்வு மீண்​டும் தங்​கக் கடத்​தலை தூண்​டக்​கூடும் என தொழில் துறை​யினர் எச்சரித்துள்ளனர்.

SCROLL FOR NEXT