சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 21) பவுனுக்கு ரூ.2,640 குறைந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 என குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை சரிந்தது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.333 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,620-க்கும், பவுனுக்கு ரூ.2,640 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,08,960-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.2,880 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,18,864-க்கு விற்பனை ஆகிறது.
இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.250-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ கட்டி விலை கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,50,000-க்கு விற்பனை ஆகிறது.