வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம்

வேட்டையன்

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஜூலை 30) பவுனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. வெள்ளி விற்பனையை பொறுத்தவரையில் இன்று சந்தையில் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது.

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று (புதன்கிழமை) தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 என குறைந்தது.

இன்றைய விலை நிலவரம்

இந்தச் சூழலில் தங்கம் விலை சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் 13,230-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,05,840-க்கு விற்பனையாகிறது.

24 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.82 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,433-க்கு விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,045-க்கு விற்பனையாகிறது.

இன்று வெள்ளி விலையை பொறுத்தவரையில் மாற்றம் ஏதுமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,35,000-க்கும் விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT