வணிகம்

தொடர் சரிவுக்கு பிறகு தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயர்வு

வேட்டையன்

சென்னை: தொடர் சரிவுக்கு பிறகு 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஜூன் 26) பவுனுக்கு ரூ.640 என உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 என உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் (மே) தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்தது. ஜூன் 23 அன்று பவுனுக்கு ரூ.320, ஜூன் 24 அன்று பவுனுக்கு ரூ.1,680, ஜூன் 25 அன்று பவுனுக்கு ரூ.1,680 என தங்கம் விலை குறைந்தது.

கடைசியாக கடந்த 20-ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 என உயர்ந்திருந்தது.

இந்நிலையில், இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220-க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,05,760-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.87 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,422-க்கு விற்பனையாகிறது.

18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.94 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,075-க்கும், பவுனுக்கு ரூ.752 அதிகரித்து ஒரு பவுன் ரூ.88,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.235-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,35,000-க்கும் விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT