தங்கம் விலை நிலவரம்
சென்னை: சென்னையில் இன்று (ஏப்.6) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் பவுனுக்கு ரூ.1,120 என குறைந்தது. ஆனால், மாலை வர்த்தத்தில் பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்து விற்பனையாகிறது.
இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் குறித்து விரிவாக பார்ப்போம்.
மேற்காசிய போர், சர்வதேச பொருளாதார சூழல், கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மறுபக்கம் உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதனால் இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இந்தச் சூழலில் சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை சரிந்தது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.140 மற்றும் பவுனுக்கு ரூ.1,120 என விலை குறைந்தது. இதனால் ஒரு கிராம் ரூ.13,810-க்கும், ஒரு பவுன் ரூ.1,10,480-க்கும் விற்பனை ஆனது.
ஆனால் பிற்பகலில் கிராமுக்கு ரூ.180 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13990-க்கும், பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,11,920-க்கும் விற்பனையாகிறது.
24 காரட் தங்கம், கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,262-க்கும், 18 காரட் தங்கம், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,670-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.260-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனை ஆகிறது.