வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

வேட்டையன்

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஜூன் 15) பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 என உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதோடு உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

கடந்த மாதம் (மே) தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் சென்னையில் கடந்த சனிக்கிழமை அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,070-க்கும், பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,12,560-க்கும் விற்பனையாகிறது.

18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.190 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800-க்கும், 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.229 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,349-க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் ப்ளாட்டினம் ரூ.5,248-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.280-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,80,000-க்கும் விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT