சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.10) பவுனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.8,000 அதிகரித்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
அந்த வகையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,030-க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு பவுன் ரூ.96,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைக் கண்டுள்ளது. அதன்படி இன்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8-ம், கிலோவுக்கு ரூ.8 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.207-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.
டிச 1 தொடங்கி இன்று வரை தங்கம் விலை நிலவரம்: ( ஒரு பவுன் )
10.12.2025- ரூ.96,240
09.12.2025- ரூ.96,000
08.12.2025- ரூ.96,320
07.12.2025- ரூ.96,320
06.12.2025- ரூ.96,320
05.12.2025- ரூ.96,000
04.12.2025- ரூ.96,160
03.12.2025- ரூ.96,480
02.12.2025- ரூ.96,320
01.12.2025- ரூ.96,560
இதன்படி கடந்த 10 நாட்களாக தங்கம் விலை பவுனுக்கு அதிகபட்சமாக டிச.1 அன்று ரூ.96,560-க்கும், குறைந்தபட்சமாக டிச.5 மற்றும் 9 தேதிகளில் ரூ.96,000-க்கும் விற்பனையாகியுள்ளது. தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் பவுன் ரூ.1 லட்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.96 ஆயிரம் வரை நெருங்கியுள்ளது நடுத்தர வர்க்க மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.