சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,360 குறைந்து, ரூ.1,11,200-க்கு விற்கப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், கடந்த 2025-ம் ஆண்டு டிச.15-ம் தேதி ஒரு பவுன் ரூ.1,00,120-க்குவிற்கப்பட்டது. நடப்பு ஆண்டில் கடந்த ஜன.29-ம் தேதி வரலாறு காணாத விதமாக, பவுன் தங்கம் ரூ.1,34,400 ஆக அதிகரித்தது. பிப்.25-ம் தேதி ரூ.1,19,200-க்கு விற்கப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக தங்கம் விலை உயர்ந்தது.
இதன் பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த 7 நாட்களாக தங்கம் விலை தொடர்ச்சியாக சரிவடைந்து வருகிறது.
நேற்று முன்தினம் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,570-க்கும், ஒரு பவுன் ரூ.1,16,560-க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.670 என பவுனுக்கு ரூ.5,360 குறைந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.13,900-க்கும், ஒரு பவுன் ரூ.1,11,200-க்கும் விற்பனையானது.
24 காரட் சுத்தத் தங்கம் நேற்று முன்தினம் ரூ.15,894-க்கும், ஒரு பவுன் ரூ.1,27,152-க்கும் விற்கப்பட்டது. நேற்று ஒரு கிராம் ரூ.15,163, ஒரு பவுன் ரூ.1,21,304 என விற்பனையானது. வெள்ளி விலையும் குறைந்ததுவெள்ளி விலை கிராமுக்குரூ.10 குறைந்து, ரூ.265-க்குவிற்கப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, நேற்று ரூ.2,65,000-க்கு விற்கப்பட்டது.