வணிகம்

மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம் தொட்ட தங்கம்: வியாபாரிகள் சொல்வது என்ன?

செய்திப்பிரிவு

சென்னை: ஆபரணத்​தங்​கத்​தின் விலை நேற்று மீண்​டும் வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. பவுனுக்கு ரூ.880 உயர்ந்​து, ரூ.1 லட்​சத்து 6,240-க்கு விற்​கப்​பட்​டது.

கடந்த டிச.15-ம் தேதி ஒரு பவுன் ரூ.1 லட்​சத்து 120-க்கு விற்​கப்​பட்​டது. இதன்​பிறகு, தங்​கம் விலை படிப்​படி​யாக உயர்ந்து வந்​தது. டிச.27-ல் ஒரு பவுன் ரூ.1 லட்​சத்து 4,800 ஆக உயர்ந்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. இதன்​தொடர்ச்​சி​யாக, சென்​னை​யில் ஆபரணத்​தங்​கத்​தின் விலை நேற்று மீண்​டும் வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. பவுனுக்கு ரூ.880 உயர்ந்​து, ரூ.1 லட்​சத்து 6,240-க்கு விற்​கப்​பட்​டது. ஒரு கிராம் தங்​கம் ரூ.110 உயர்ந்து ரூ.13,280 ஆக இருந்​தது. 24 காரட் தங்​கம் ரூ.1 லட்​சத்து 15,896-க்கு விற்​கப்​பட்​டது.

இது​போல, வெள்ளி விலை​யும் உயர்ந்​தது. கிரா​முக்கு ரூ.15 உயர்ந்​து ரூ.307 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் உயர்ந்​து, ரூ.3 லட்​சத்து 7 ஆயிர​மாகவும் இருந்​தது. தங்​கம், வெள்ளி உயர்வு குறித்​து, சென்னை தங்​கம் மற்​றும் வைர நகை வியா​பாரி​கள் சங்க பொதுச்​செய​லா​ளர் எஸ்​.​சாந்​தக்​கு​மார் கூறியதாவது: கிரீன்​லாந்து பிரச்சினை, ஈரானில் பதற்​ற​மான சூழ்​நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வுபோன்ற காரணங்​களால், தங்​கத்​தின் மீது முதலீடு செய்வது அதி​கரித்​துள்​ளது.

இதுத​விர, பண்​டிகை காலத்​தில் தங்​கத்​தின் தேவை அதி​கரித்​துள்​ளது. இந்த காரணங்​களால் தங்​கத்​தின்​விலை உயர்​ந்​துள்​ளது. ஓரிரு ​வாரங்​களுக்​கு விலை உயர்​வு நீடிக்​கும்​. இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT