சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 2) சென்னையில் பவுனுக்கு ரூ.640 என உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,440 என குறைந்தது. அதற்கு முந்தைய நாளான ஏப்.30-ம் தேதி அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,600 என விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,000-க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,12,000-க்கும் விற்பனையாகிறது.
24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.87 என விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,273-க்கும், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 என விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,680-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.270-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனையாகிறது.