வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,840 உயர்வு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000 அதிகரிப்பு

வேட்டையன்

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.15,000 அதிகரித்துள்ளது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனால் சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

          

இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று (பிப்.9) காலை வர்த்தகம் தொடங்கியதும் கிராமுக்கு ரூ.230 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,650-க்கு விற்​பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,17,200-க்கு விற்பனை ஆகிறது.

இதேபோல 24 காரட் சுத்த தங்​கம் பவுனுக்கு ரூ.2,008 என உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,27,856-க்கு விற்பனை ஆகிறது. 18 காரட் தங்​கம் பவுனுக்கு ரூ.1,360 என உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,00,160-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிரா​முக்கு ரூ.15 உயர்ந்து, ரூ.300-க்​கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்து, ரூ.3,00,000-க்​கும் சந்தையில் விற்பனை ஆகிறது. பிளாட்டினம் விலை கிராமுக்கு ரூ.20 என விலை குறைந்து ஒரு கிராம் ரூ.6,091-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், ஆபரணத் தங்கம் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

SCROLL FOR NEXT