சென்னை: தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.6) பவுனுக்கு ரூ.1,600 குறைந்து விற்பனை ஆகிறது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 என விலை சரிந்தது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனால் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தைகளின் முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. இன்று (பிப்.6) காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,120-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,12,960-க்கு விற்பனை ஆகிறது.
24 காரட் சுத்த தங்கம் பவுனுக்கு ரூ.1,744 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,23,232-க்கு விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.1,200 குறைந்து, ஒரு பவுன் ரூ.96,800-க்கு விற்பனை ஆகிறது.
இதேபோல வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து, ரூ.280-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து, ரூ.2,80,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது. பிளாட்டினம் விலை கிராமுக்கு ரூ.295 என விலை குறைந்து ஒரு கிராம் ரூ.5,666-க்கு விற்பனையாகிறது.