சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (பிப்.5) காலை வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.4,640 குறைந்து விற்பனை ஆகிறது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 என விலை சரிந்தது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனால் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.5) கிராமுக்கு ரூ.580 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,320-க்கு விற்பனை ஆகிறது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.4,640 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,14,560-க்கு விற்பனை ஆகிறது.
24 காரட் சுத்த தங்கம் பவுனுக்கு ரூ.5,072 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,24,976-க்கும் விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.4,000 குறைந்து, ஒரு பவுன் ரூ.98,000-க்கும் விற்பனை ஆகிறது.
இதேபோல வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து, ரூ.300-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து, ரூ.3,00,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது.
கடந்த ஜனவரி 29-ம் தேதி ஒரு கிலோ வெள்ளி ரூ.4,25,000-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. பிளாட்டினம் விலை கிராமுக்கு ரூ.653 என விலை குறைந்து ஒரு கிராம் ரூ.5,961-க்கு விற்பனையாகி வருகிறது.