தங்கம் விலை நிலவரம்

 
வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்வு; வெள்ளி மாற்றமின்றி விற்பனை

அனலி

சென்னை: சென்னையில் 3-வது நாளாக இன்றும் (நவ.4) தங்கம் விலை சற்றே உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.4) பவுனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. வெள்ளி மாற்றமின்றி விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதோடு கடந்த செப்.1-ம் தேதி அன்று ‘தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள்’ என நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதையடுத்து தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது. இந்தச் சூழலில் கடந்த நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 என உயர்ந்தது.

இந்நிலையில், 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,02,400-க்கு விற்பனை ஆனது.

தொடர்ந்து, இன்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,825-க்கும் பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,02,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.200-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT