தங்கம் விலை நிலவரம்

 
வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்வு - இன்றைய நிலவரம் என்ன?

தமிழினி

சென்னை: தங்கம் விலை இன்று (ஜன.10) கிராமுக்கு ரூ.100 ஆகவும், பவுனுக்கு ரூ.800 ஆகவும் உயர்ந்துள்ள நிலையில், ஒரு பவுன் 1,03,200க்கு விற்பனையாகிறது.

சர்​வ​தேச பொருளா​தா​ரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகிறது. கடந்த சில மாதங்​களாகவே தங்​கம் விலை அதிகரித்துவரு​கிறது. சில நேரங்​களில் விலை குறைந்​தா​லும், மீண்​டும உயர்ந்து விடு​கிறது.

இந்த நிலையில், இன்று (ஜன.10) தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,900-க்கும் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு பவுன் 1,03,200க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ஒரு கிராம் ரூ.275, கிலோவுக்கு அதிரடியாக ரூ.7,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT