வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,840 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

வேட்டையன்

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 28) பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.5,000 என விலை அதிகரித்துள்ளது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

          

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் மீதும் எதிரொலிக்கிறது.

அந்த வகையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,660-க்கும், பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,09,280-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.2,008 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,19,216-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.91,200-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.250 என விற்பனை ஆகிறது. ஒரு கிலோ கட்டி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,50,000-க்கு விற்பனை ஆகிறது.

SCROLL FOR NEXT