சென்னை: சென்னையில் இன்று (நவ.19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 என உயர்ந்துள்ளது. இதே போல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 என உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு என சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த அக்.17-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.97,600 ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. பின்னர் தங்கம் விலை குறைந்தும், உயர்ந்தும் வருகிறது.
கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,500-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.92,000-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,00,368 மற்றும் 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.76,800-க்கும் விற்பனை ஆகிறது. கடந்த 14-ம் தேதி முதல் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையும் உயர்வு: சென்னையில் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.173-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,000 உயர்ந்து, ரூ.1,73,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது.