வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.2,800 உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 8,800-க்கு விற்பனையானது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் மற்றும் சர்வதேச பொருளாதாரச் சூழல், வட்டி விகிதங்களை குறைக்க போவதில்லை என்ற அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பு போன்ற காரணங்களால், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தங்கம் விலை குறைந்து வந்தது.

          

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 8,800-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.350 உயர்ந்து, ரூ.13,600-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 18,688 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.260 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரமாகவும் இருந்தது.

SCROLL FOR NEXT