கோப்புப்படம்
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 என இன்று (ஜன.16) குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.4,000 என சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் தங்கம் விலை குறைந்து, மீண்டும உயர்கிறது. இந்நிலையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜன.15) பவுனுக்கு ரூ.80 என உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,06,320 என்ற புதிய உச்சத்தை எட்டி விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.1,05,840-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 குறைந்து, ரூ.13,230-க்கு விற்பனை ஆகிறது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.1,15,464-க்கும் விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுன் ரூ.88,400-க்கும் விற்பனை ஆகிறது.
அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு ரூ.4 குறைந்து , ரூ.306-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.3,06,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது.