படம்: மெட்டா ஏஐ 

 
வணிகம்

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 குறைவு - முழு நிலவரம் என்ன?

தமிழினி

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.,27) சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.11,770-க்கும், பவுனுக்கு ரூ.94,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான சூழல் தான் நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.11,770-க்கும் பவுனுக்கு ரூ.240 குறைந்து ஒரு பவுன் ரூ.94,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.180-க்கும் ஒரு கிலோ ரூ.1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT