வணிகம்

2-வது நாளாக தங்கம் விலை சரிவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

வேட்டையன்

சென்னை: தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது. சென்னையில் இன்று (ஏப்.29) காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,200 என சரிந்தது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 20 முதல் 24-ம் தேதி வரையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,080 என விலை குறைந்தது. கடந்த சனிக்கிழமை அன்று பவுனுக்கு ரூ.800, திங்கட்கிழமை அன்று பவுனுக்கு ரூ.240 என தங்கம் விலை உயர்ந்தது. நேற்று (ஏப்.28) பவுனுக்கு ரூ.1,040 என தங்கம் விலை குறைந்தது.

இந்த சூழலில், தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு பவுன் ரூ.1,11,600-க்கும் விற்பனையாகிறது. இந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,240 என விலை குறைந்துள்ளது.

24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.163 என விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.15,219-க்கும், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.125 என விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.11,635-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT