வணிகம்

ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் ஆபரணத்​தங்​கத்​தின் விலை வரலாறு காணாதவகை​யில் பவுனுக்கு ரூ.1,600 அதி​கரித்​து, ரூ.98,960-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது.

சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த ஆண்​டின் தொடக்​கத்​தில்​ஒரு பவுன் ரூ.57,200-க்கு விற்​பனை செய்​யப்​பட்ட நிலை​யில், தொடர்ந்து ஒவ்​வொரு மாத​மும் விலை அதி​கரித்து கொண்டே சென்​றது.

கடந்த அக்​.17-ம் தேதி 97,600 ஆக விலை அதி​கரித்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. இதையடுத்து தீபாவளி​முடிந்த பின்​னர் ஒரு பவுன் விலை ரூ.88,600 ஆகக் குறைந்​தது. பின்​னர் நவ.13-ம் தேதி ரூ.95,920 ஆக உயர்ந்​தது. அதைத்​தொடர்ந்து ஒரு மாத காலத்​துக்கு ஏற்ற இறக்​க​மாக இருந்த தங்​கத்​தின் விலை கடந்த 2 வாரங்​களாக மீண்​டும் உயரத் தொடங்​கி​யுள்​ளது.

அதன்​படி கடந்த டிச.5-ம் தேதி ரூ.96,000 ஆக இருந்த தங்​கம், டிச.8-ம் தேதி வரை ரூ.96,320-க்கு விற்​கப்​பட்​டது. பின் டிச.9 அன்று மட்​டும் குறைந்து டிச.10-ம் தேதி முதல் மீண்​டும் விலை அதி​கரித்து வரு​கிறது. அந்​தவகை​யில் நேற்று முன்​தினம் ஆபரணத்​தங்​கம் ரூ.96,400-க்கு விற்​கப்​பட்​டது.

இதன்​தொடர்ச்​சி​யாக, சென்​னை​யில் ஆபரணத்​தங்​கம் விலை நேற்று புதிய உச்​சம் தொட்டு வரலாற்று சாதனை படைத்​துள்​ளது. நேற்று ஒரு பவுன் தங்​கம் முதல்​முறை ரூ.98 ஆயிரத்தை கடந்​துள்​ளது. அதன்​படி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 அதி​கரித்து ரூ.98,960-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. ஒரு கிராம் தங்​கம் ரூ.320 அதி​கரித்​து, ரூ.12,370-க்​கு​ விற்​பனை​யானது. 24 காரட் தங்​கம் ரூ.1,07,952 ஆக இருந்​தது.

ஏற்​கெனவே, தங்​கம் விலை இந்த ஆண்டு இறு​திக்​குள் ரூ.1 லட்​சத்தை கடக்​கும் என வர்த்தக வல்​லுநர்​கள் கணித்​துள்ள நிலை​யில், அதற்​கேற்ப விலை​யும் நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​வது குடும்​பத் தலைவி​களை கவலை யடையச் செய்​துள்​ளது. தங்​கத்​துக்​குப் போட்​டி​யாக வெள்​ளி​யின் விலை​யும் கடுமை​யாக உயர்ந்​துள்​ளது. கடந்​த 5-ம் தேதி ஒரு கிராம் வெள்​ளி ரூ.196 ஆகவும், ஒரு கிலோ வெள்​ளி ரூ.1.96 லட்​ச​மாக இருந்த நிலை​யில், படிப்​படி​யாக உயர்ந்து நேற்று ஒரு கிராம் வெள்ளி 216 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.16 லட்​சத்​துக்​கும் விற்​பனை செய்​யப்​பட்​டது.

SCROLL FOR NEXT