வணிகம்

சற்றே குறைந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.640 சரிவு

வேட்டையன்

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சென்னையில் பவுனுக்கு ரூ.640 என சரிந்துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4 என குறைந்துள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. அமெரிக்​கா​வில் இறக்குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பின் தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்​களால், தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்தும் வருகிறது.

அந்த வகையில் கடந்த 15-ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.1,00,120 என வரலாறு காணாத உச்சம் தொட்டு விற்பனையானது. இதன் பின்னர் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. வரும் 2026-ம் ஆண்டு தங்கம் விலை கிராமுக்கு ரூ.15,000 வரை நெருங்கும் என தங்க நகை வியாபாரிகள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை இன்று (டிச.29) கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,020-க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ஒரு பவுன் ரூ.1,04,160-க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,13,632 மற்றும் 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.86,920-க்கும் விற்பனை ஆகிறது.

இதேபோல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.4 குறைந்து, ஒரு கிராம் ரூ.281-க்கும், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,81,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது.

SCROLL FOR NEXT