வணிகம்

அணுசக்தி, ஏஐ துறையில் வளர்ச்சி காண்பதே இலக்கு: அதானி குழும தலைவர் கவுதம் அதானி உறுதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அணுசக்​தி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்​றும் உள்கட்​டமைப்​புத் துறை​களில் பிரம்​மாண்​ட​மான வளர்ச்சி இலக்கு​களை எட்​டு​வதே தனது எதிர்​கால கனவு என்று அதானி குழு​மத்​தின் தலை​வர் கவுதம் அதானி உறு​திபடத் தெரிவித்துள்ளார்.

அதானி குழுமத்தின் வரு​டாந்​திர பொதுக் கூட்​டத்​தில் கவுதம் அதானி பேசி​ய​தாவது: நாட்​டின் ஆற்​றல் பாது​காப்​பு, தொழில்நுட்பம் மற்​றும் இறை​யாண்மை ஆகியவை ஒன்​றோடொன்று பின்​னிப் பிணைந்​துள்ள புதிய உலகிற்கு ஏற்ப அதானி குழு​மம் தன்​னைத் தயார்​படுத்தி வரு​கிறது.

கடந்த நிதி​யாண்​டில் கடுமை​யான சோதனை​களை​யும், தீவிரக் கண்​காணிப்​பு​களை​யும் எதிர்​கொண்ட போதி​லும், நிறு​வனத்​தின் அஸ்​தி​வாரம் வலு​வாக உள்​ளது. அதானி குழு​மம் அணுசக்​தித் துறை​யில் அதி​காரப்​பூர்​வ​மாகக் கால்​ப​தித்​துள்​ளது. இதற்​காக ‘அதானி அட்​டா​மிக் எனர்​ஜி' என்ற புதிய நிறு​வனம் தொடங்கப்பட்டு, அதற்​கான நிலங்​களும் கண்​டறியப்​பட்​டுள்​ளன. வரும் 2035-ம் ஆண்​டிற்​குள் 10 கிகா​வாட் அணுசக்​தித் திறனை எட்டு​வதை அதானி குழு​மம் இலக்​காகக் கொண்​டுள்​ளது.

இந்​தி​யா​வின் வளர்ந்து வரும் தொழில் துறைத் தேவை​கள் மற்​றும் தரவு மையங்​களின் அதிவேக விரி​வாக்​கத்​திற்​குத் தேவை​யான தூய்​மை​யான ஆற்​றலை வழங்க இந்த உத்​தி​சார் முடிவு உதவும். உள்​கட்​டமைப்பு ஒரு நாட்​டிற்கு வலிமை​யைத் தரு​கிறது; செயற்கை நுண்​ணறிவு அந்த நாட்​டிற்​குப் பேர​தி​காரத்​தைத் தருகிறது. எனவே இவ்​விரண்டு துறை​களும் இனி தனித்​தனி அல்ல.

விசாகப்​பட்​டினத்​தில் பிரம்​மாண்ட தரவு மையத் திட்​டத்தை அமைப்​ப​தற்​காக ‘கூகுள்' நிறு​வனத்​துடன் அதானி குழு​மம் இறுதி ஒப்​பந்​தம் செய்​து​கொண்​டுள்​ளது. வரும் 2030-ம் ஆண்​டுக்குள் 3 கிகா​வாட் திறன் கொண்ட தரவு மைய கட்​டமைப்பை உருவாக்கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

கடந்த நிதி​யாண்​டில் மட்​டும் உள்​கட்​டமைப்​புத் துறை​யில் ரூ.1.5 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மாக அதானி குழு​மம் முதலீடு செய்துள்ளது. இது நடப்​பாண்​டில் இந்​தி​யா​வின் ஒட்​டுமொத்த தனியார் துறை மூலதனச் செல​வினத்​தில் 30 சதவீதத்​திற்​கும் அதிகம் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இவ்​வாறு அதானி பேசி​னார்​.

SCROLL FOR NEXT