வணிகம்

செல்போன் திரை​யில் அழைப்பவர் பெயர் இடம்பெற செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத்​தொடர்​புத் துறை உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் நவ.1 முதல் செல்​போன்​களின் திரை​யில் அழைப்​பவரின் பெயர் இடம் பெற வேண்​டும் என செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத்​தொடர்​புத் துறை உத்​தரவு பிறப்பித்துள்​ளது. இந்​தி​யத் தொலைத்​தொடர்பு ஒழுங்​கு​முறை ஆணை​யம் (டிராய்) 2024 பிப்​.23-ம் தேதி சில பரிந்​துரைகளை வழங்​கியது.

அதில் செல்​போன்​களின் திரை​யில் அழைப்​பவரின் பெயர் இடம் பெற வேண்​டும் என தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதை ஏற்று வரும் நவ.1 முதல் செல்​போன்களின் திரை​யில் அழைப்​பவரின் பெயர் இடம் பெற வேண்​டும் என செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத்​தொடர்​புத் துறை உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இதன்​படி, உள்​நாட்​டிலிருந்து வரும் அனைத்து அழைப்​பு​களி​லும், அழைப்​பவரின் தொலைபேசி எண்​ணுடன் அவரது பெயரும் திரையில் காட்​டப்​படும். அழைப்​பவரின் எண்​ணை, அழைப்​பைப் பெறு​பவர் தனது தொடர்​புப் பட்​டியலில் சேமித்து வைத்​திருந்​தால், சேமித்த பெயர் திரை​யில் தோன்​றும். அந்த எண் சேமிக்கப்படாமல் இருந்​தால், அழைப்​பவரின் தொலைத்​தொடர்பு நிறு​வனப் பதிவு​களில் உள்ள பெயர் திரை​யில் காட்​டப்​படும்.

வெளி​நாட்​டிலிருந்து வரும் அழைப்​பு​களுக்​கு, ‘சர்​வ​தேச அழைப்​பு’ (International Call) என்ற வாசகம் திரை​யில் தோன்​றும். இந்​தப் பெயர் காட்​டும் வசதியை அறி​முகப்​படுத்​து​வதற்​காக ஏர்​டெல், ஜியோ, வோடஃ​போன் ஐடியா உள்​ளிட்ட தொலைத்​தொடர்பு சேவை நிறு​வனங்​கள் வயர்​லெஸ் தொலைத்​தொடர்பு வலைப்​பின்​னல்​களில் சோதனை​களை மேற்​கொள்ள வேண்​டும் என உத்​தர​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த வசதி 4ஜி மற்​றும் அதற்​கும் மேம்​பட்ட தலை​முறை வயர்லெஸ் வலைப் பின்​னல்​களில் செயல்​படுத்​தப்​படும். பின்​னர், 2ஜி, 3ஜி, தரைவழித் தொலை பேசி இணைப்​பு​களுக்​கும் இந்த வசதியை விரிவுபடுத்​து​வது குறித்து அரசு பரிசீலிக்​கும்.

இந்த வசதி​யைச் செயல்​படுத்த, ஒவ்​வொரு தொலைத்​தொடர்பு நிறுவன​மும் வாடிக்​கை​யாளர்​களின் பெயர்​களை​யும் தொலைபேசி எண்​களை​யும் இணைக்​கும் புதுப்​பிக்​கப்​பட்ட தரவுத் தளத்​தைப் பராமரிக்க வேண்​டும்.

மேலும், அழைப்​பின் தரத்தை பாதிக்​காத வகை​யில், பெயர்​களை விரை​வாகத் தேடிப் பெறு​வதற்​குத் தேவை​யான திறனுடன் தங்​களது தரவுத் தளங்களும் வலைப் பின்​னல்​களும் இருப்​பதை நிறு​வனங்​கள் உறு​தி​செய்ய வேண்​டும்.

யாருடைய பெயர்​ காட்​டாது?

அழைப்​பவரின் தொலைபேசி எண்ணை மறைக்​கும் வசதி​யைத் (CLIR-Calling Line Identification Restriction) தேர்ந்​தெடுத்​துள்ள வாடிக்​கை​யாளர்​களின் பெயர்​கள் திரை​யில் காட்​டாது.

மேலும், அழைப்பவரின் பெயரைக் காட்​டும் வசதி தொடர்​பான புகார்களைப் பெறு​வதற்​கும், குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் அவற்றை விசா​ரித்​துத் தீர்வு காண்​ப​தற்​கும் தொலைத்​தொடர்பு நிறு​வனங்​கள் உரிய அமைப்பை ஏற்​படுத்த வேண்​டும் என்​றும் அந்​த உத்​தர​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT