நாமக்கல்: டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகைக் கட்டணம் 25 சதவீதம் உயர்த்த மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
நாமக்கல்லில் இந்த சம்மேளனத்தின் செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதில், ‘மே 15 முதல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால், லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க லாரி வாடகை கட்டணம் தற்போதைய கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்ற முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அதிக பாரம் ஏற்றும் லாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.