காரல் மீன்கள்
ராமேசுவரம்: 10 நாட்களுக்கு பின்னர் கடலுக்குச் சென்ற ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வலையில் டன் கணக்கில் காரல் மீன்கள் சிக்கின.
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிய டிட்வா புயலினால் தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்குக் செல்வதற்கு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், 10 நாட்களுக்கு பிறகு பாக் நீரிணை கடற்பகுதியில் வானிலை சீரானதை தொடர்ந்து, ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத் துறைமுகத்திலிருந்து 429 விசைப்படகுகளில் அனுமதி டோக்கன் பெற்று சுமார் 2,500 மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்று வியாழக்கிழமை கரை திரும்பினர்.
கரை திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள் வலையில் ஒவ்வொரு படகிலும் சராசரியாக 4 டன் முதல் 5 டன் வரையிலும காரல் மீன்கள் சிக்கிருந்தன. மீன் எண்ணெய் மற்றும் கோழித்தீவனம் தயாரிப்பதற்காக பயன்படும் இந்த சிறிய மீன் இன்று கிலோ ரூ.15 என விலை நிர்ணயம் செய்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.
மேலும், சிறிய விசைப்படகுகளில் இறால், கணவாய், நண்டு உள்ளிட்டவை 40 முதல் 50 கிலோ வரை சிக்கிருந்தன. அனைத்து படகுகளுக்கும் நல்ல மீன்பாடு கிடைத்ததால் 10 நாட்களுக்கு பிறகு கடலுக்குச் சென்று கரை திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.