மாதிரி படம்

 
வணிகம்

திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ரூ.1,012 கோடியில் 2 மின்னணு பொருட்கள் உற்பத்தி மையம்

மத்​திய அரசு ஒப்​புதல்

செய்திப்பிரிவு

சென்னை: திரு​வள்​ளூர் மாவட்​டம் மணலூர், காஞ்​சிபுரம் மாவட்​டம் பிள்​ளைப்​பாக்​கத்​தில் ரூ.1,012 கோடி மதிப்​பீட்​டில் மின்​னணு பொருட்​கள் உற்​பத்தி மையங்​கள் அமைப்​ப​தற்கு மத்​திய அரசு ஒப்​புதல் அளித்​துள்​ளது.

மின்​னணு சாதனங்​கள் உற்​பத்தி துறை​யில் இந்​தியா மிக வேக​மாக வளர்ந்து வரு​கிறது. ஏஐ எனப்​படும் செயற்கை நுண்​ணறி​வு, மின்​னணு சாதனங்​கள் மற்​றும் செமிகண்​டக்​டர் தொடர்​பான தொழில்​களை மேலும் விரிவுபடுத்த மத்​திய அரசு பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது.

இந்த நிலை​யில், திரு​வள்​ளூர் மாவட்​டம் மணலூர், காஞ்​சிபுரம் மாவட்​டம் பிள்​ளைப்​பாக்​கத்​தில் ரூ.1,012 கோடி மதிப்​பீட்​டில் மின்​னணு பொருட்​கள் உற்பத்தி மையங்​கள் ( Electronics Manufacturing Clusters_EMC) அமைக்க மத்​திய அரசு ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது. அதன்​படி, மணலூரில் ரூ.587.47 கோடி மதிப்​பீட்​டில் 474.3 ஏக்​கர் பரப்​பிலும், பிள்​ளைப்​பாக்​கத்​தில் ரூ.424.55 கோடி செல​வில் 379.3 ஏக்​கர் பரப்​பிலும் மின்​னணு பொருட்​கள் உற்​பத்தி மையங்​கள் அமைக்​கப்பட உள்​ளன.

நாட்​டின் மின்​னணு பொருட்​களின் உற்​பத்​தியை மேம்​படுத்த மத்​திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பல்​வேறு புதிய முயற்​சிகளை மேற்​கொண்டு வரு​கிறது. அதன் காரண​மாக, இந்​தி​யா​வில் மின்​னணு பொருட்​களின் உற்​பத்தி 7 மடங்​கும், அவற்​றின் ஏற்​றுமதி 11 மடங்​கும் அதி​கரித்​துள்​ளன. நம் நாட்​டில் விற்​பனை செய்​யப்​படும் மொத்த செல்​போன்​களில் 99.2 சதவீதம் உள்​நாட்​டிலேயே தயாரிக்​கப்​படு​கின்றன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

மணலூர் மற்​றும் பிள்​ளைப்​பாக்​கத்​தில் அமைக்​கப்பட உள்ள மின்​னணு பொருட்​கள் உற்​பத்தி மையங்​கள் மூலம் தமிழகத்​தில் மின்​னணு உற்​பத்தி திறன் மேலும் அதி​கரிக்​கும். புதிய தொழிற்​சாலைகள் வரு​வ​தால் அப்​பகு​தி​யில் ஆயிரக்​கணக்​கானோருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும்​.

புதிய தொழிற்​சாலைகள், மின்​னணு உதிரி​பாக உற்​பத்தி நிறு​வனங்​கள், சப்ளை செயின் நிறு​வனங்​கள் மற்​றும் துணைத் தொழில்​கள் அதிக அளவில் உரு​வாகும்​ என எதிர்​பார்​க்​கப்​படுகிறது

SCROLL FOR NEXT