வணிகம்

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்: இந்தியா உறுதி

100% வரி விதிக்​கும் அமெரிக்காவின் முடிவுக்கு பதில்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது தொடரும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்​றும் ஈரான் மீது தடைகளை விதிக்​கும் மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்​மூலம் ரஷ்​யா​விடம் அதி​கள​வில் எண்​ணெய் வாங்​கும் முதல் 5 நாடு​களான சீனா, இந்​தி​யா, ஸ்லோ​வாக்​கி​யா, ஹங்​கேரி மற்​றும் அஜர்​பைஜான் ஆகிய நாடு​கள் மீது 100% வரை சுங்க வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​புக்கு அதி​காரம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இம்​மசோதா விரை​வில் அதிபரின் ஒப்​புதலுக்​காக அனுப்பி வைக்​கப்​பட்டு அவர் கையெழுத்​திட்​ட​வுடன் நடை​முறைக்கு வரும்.

இதுகுறித்து இந்​திய வெளி​யுறவு அமைச்​சகம் கூறி​யுள்​ள​தாவது: நாட்​டின் 140 கோடி மக்​களின் எரிசக்​தித் தேவையைப் பூர்த்தி செய்​வ​தில் இந்​தியா உறு​தி​யுடன் உள்​ளது. சந்தை நில​வரங்​களுக்கு ஏற்ப பல்​வேறு நாடு​களிடம் இருந்து கச்சா எண்​ணெயைக் கொள்​முதல் செய்​வது தொடரும்.

நாட்​டின் வர்த்தக, பொருளா​தார நலன்​களைப் பாது​காக்க தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளும் எடுக்​கப்​படும். அதன் பாதிப்​பு​களை எதிர்​கொள்ள இந்​திய தொழில் அமைப்​பு​களு​டன் இணைந்து அரசு செயல்​படும். இவ்​வாறு வெளி​யுறவு அமைச்​சகம் கூறி​யுள்​ளது. இந்​தி​யா​வின் முதன்மை கச்சா எண்​ணெய் விநி​யோகஸ்​த​ராக ரஷ்யா உள்​ளது. கடந்த ஜூலை மாதத்​தில் இந்​தி​யா​வின் மொத்த கச்சா எண்​ணெய் இறக்​கும​தி​யில் 51.1 சதவீதத்தை ரஷ்​யாவே வழங்​கி​யுள்​ளது.

இது ஐக்​கிய அரபு அமீரகம், சவுதி அரேபி​யா, வெனிசுலா, பிரேசில், ஓமன் மற்​றும் அமெரிக்கா ஆகிய நாடு​கள் அனைத்​தும் இணைந்து வழங்​கியதை விட அதி​க​மாகும். இருப்​பினும், எரிசக்தி கொள்​முதலைப் பரவலாக்​கும் முயற்​சி​யாக அமெரிக்கா மற்​றும் வெனிசுலா​விட​மிருந்​தும் கொள்​முதல்​ செய்​வதை இந்​தி​யா அதிகரித்​து வருகிறது.

SCROLL FOR NEXT