வணிகம்

கச்சா எண்ணெய் விலை தாக்கம்: சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் வீழ்ச்சி

செய்திப்பிரிவு

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி நிலவியது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்செக்ஸ் 1,200.19 சரிந்து 73,628.06 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 379.50 புள்ளிகள் சரிந்து 23,067.30 ஆகவும் இருந்தது. இந்த வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரான் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை பேரல் விலை மீண்டும் 100 டாலரைக் கடந்துள்ளது. இதன் தாக்கத்தால் சர்வதேச பங்குச் சந்தைகளில் சரிவுப் போக்கு நீடிக்கிறது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனப் பங்குகளுமே சரிவை சந்தித்துள்ளன. இந்த வீழ்ச்சிப் போக்கும் நீடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை இன்று ஒரே நாளில் 4% அதிகரித்து, பேரலுக்கு 102.5 டாலராக உள்ளது. இதுவே, பங்குச் சந்தை வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT