வணிகம்

7 முக்கியத் துறைகளில் அந்நிய நேரடி முதலீடு: சீனத் தொடர்புடைய நிறுவனங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்​டின் உள்​நாட்டு உற்​பத்​தித் திறனை மேம்​படுத்​த​வும், அந்நிய முதலீடு​களை ஈர்க்​க​வும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் 2025-26 நிதி​யாண்​டில் மொத்த அந்​நிய நேரடி முதலீடு 9,000 கோடி டாலரை எட்​டும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இந்​தி​யா​வுடன் நில எல்​லைகளைப் பகிர்ந்து கொள்​ளும் நாடு​களைச் சேர்ந்த முதலீட்​டாளர்​கள், ஒரு நிறு​வனத்​தில் 10 சதவீதத்​திற்​கும் குறை​வான பங்​கு​களை வைத்​திருந்​தால், அதற்கு தானி​யங்கி முறை மூலம் அனு​மதி வழங்க மத்​திய அமைச்​சரவை கடந்த மார்ச் 10-ம் தேதி ஒப்​புதல் அளித்​தது. இது தொடர்​பான முறை​யான அறி​விப்பு விரை​வில் வெளி​யாக​வுள்​ளது.

தொழில் மற்​றும் உள்​நாட்டு வர்த்தக மேம்​பாட்​டுத் துறை இது குறித்த முதற்​கட்ட அறி​விப்பை வெளி​யிட்​டிருந்​தா​லும், அந்​நியச் செலா​வணி மேலாண்​மைச் சட்​டத்​தின் கீழ் சில திருத்​தங்​களை மேற்​கொள்​வது குறித்து அமைச்​சகங்​களுக்கு இடையே​யான ஆலோ​சனை​கள் தற்​போது நடை​பெற்று வரு​கின்​றன.

இது குறித்து டிபிஐஐடி இணைச் செய​லா​ளர் ஜெய் பிர​காஷ் சிவஹாரே கூறுகை​யில், "பொருளா​தார விவ​காரங்​கள் துறை அந்​நிய முதலீடு குறித்த அறி​விப்பை ஃபெமா சட்​டத்​தின் கீழ் வெளி​யிடும். தற்​போதைய சட்​டங்​களு​டன் புதிய விதி​களை ஒருங்​கிணைக்​கும் பணி​கள் இறு​திக்​கட்​டத்​தில் உள்​ளன. இது மிக விரை​வில் நடை​முறைக்கு வரும்" என்​றார்.

புதிய விதி​களின் மூலம் தேங்​கிக் கிடக்​கும் சுமார் 600 முதலீட்டு விண்​ணப்​பங்​களுக்கு விரை​வில் தீர்வு காண முடி​யும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. முதற்​கட்​ட​மாக அடை​யாளம் காணப்​பட்​டுள்ள 7 முக்​கி​யத் துறை​களில், அரிய வகை நிரந்தரகாந்​தங்​கள், அரிய வகை தாதுக்​கள் சுத்​தி​கரிப்​பு, பாலிசிலிக்​கான்- இங்​காட்​-வேஃபர், மேம்​பட்ட பேட்​டரி பாகங்​கள், மின்​னணு பாகங்​கள் தயாரிப்பு மூலதனப் பொருட்​கள் உற்​பத்​தி, மின்​னணு மூலதனப் பொருட்​கள் உற்​பத்தி ஆகியவை அடங்​கும். இந்​தத் துறை​களில் விண்​ணப்​பிக்​கும் தகு​தி​யுள்ள நிறு​வனங்​களுக்கு 60 நாட்​களுக்​குள் அனு​மதி வழங்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

அதே​நேரம், சீனா, ஹாங்​காங், பாகிஸ்​தான் அல்​லது வங்​கதேசம் ஆகிய நாடு​களில் பதிவு செய்​யப்​பட்ட நிறு​வனங்​களுக்கு தானி​யங்கி முறை அனு​மதிபொருந்​தாது என்​றும்​ தெளிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது" என்​றார்​.

SCROLL FOR NEXT