சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 139 நாட்களுக்கு பருத்தி மற்றும் பட்டு ஆடைகள் 30 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணாவின் 117-வது பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடும் வகையில், செப்டம்பர்
15-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜன. 31-ம் தேதி வரை 139 நாட்களுக்கு பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கு, ஆண்டு முழுவதும் வழங்கப்படும் 20 சதவீத தள்ளுபடியுடன் கூடுதலாக 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும்.
இதன்மூலம் 139 நாட்களும் பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தரமான பட்டு மற்றும் பருத்தி துணிகளை சிறப்புத் தள்ளுபடி விலையில் வாங்கி, கைத்தறிப் பொருட்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.