வாஷிங்டன்: சீனாவை தலைமையிடமாகக் கொண்ட பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் செல்போன் செயலியில் பதிவாகும் தகவல்கள், சீன அரசுடன் பகிரப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, 2020-ம் ஆண்டு இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவிலேயே புதிய நிறுவனத்தை உருவாக்குவதற்காக டிக் டாக் நிறுவனம் ஒப்பந்தத்தை இறுதி செய்யவுள்ளது.
இதற்காக அமெரிக்காவின் ஆரக்கிள், சில்வர் லேக், எம்ஜிஎக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தை விரைவில் டிக் டாக் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அமெரிக்கர்களுக்காக விரிவான தகவல் பாதுகாப்பு, தேசப் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை இந்த புதிய நிறுவனம் செய்யும் என்று டிக் டாக் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக அமெரிக்காவிலேயே நிறுவனத்தை டிக் டாக் நிறுவனம் தொடங்குவதை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வரவேற்றுள்ளார்.