தங்கம், வெள்ளி விலை நிலவரம்

 
வணிகம்

மீண்டும் ரூ.1.06 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை!

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 240-க்கு விற்கப்படுகிறது.

சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகி​றது. அந்த வகையில், டிச.15-ல் ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்கப்பட்டது. இதன் பிறகு, தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. டிச.27-ல் ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800 ஆக உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், ஜன.13-ல் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 360-ஆகவும், ஜன.14-ல் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 240 ஆகவும் என அடுத்தடுத்து உயர்ந்து, புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஜன.15-ம் தேதி சற்று விலை உயர்ந்திருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.480 குறைந்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 240-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.13,280 ஆக இருந்தது. 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 896-க்கு விற்கப்பட்டது.

இதுபோல, வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.4 உயர்ந்து, ரூ.310 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் உயர்ந்து, ரூ.3 லட்சத்து 10 ஆயிரமாக இருந்தது.

SCROLL FOR NEXT