வணிகம்

தூத்துக்குடி - சென்னை இடையே இரவு விமான சேவை இன்று முதல் தொடக்கம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி- சென்னை இடையே இரவு விமான சேவை இன்று முதல் தொடங்கப்படுகிறது. அதேபோல் விமானம் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். இங்கு பெரிய விமானங்கள் தரையிறங்குவதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் இரவு நேர விமான சேவைக்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

          

தனியார் விமான நிறுவனம் மூலம் தூத்துக்குடி- சென்னை இடையே காலை 8 மணி, 11.25 மணி, மதியம் 1.50 மணி, மாலை 4.15 மணி ஆகிய 4 விமான சேவையும். தூத்துக்குடி- பெங்களூரு இடையே மதியம் 12.15 மணிக்கு ஒரு விமான சேவையும் வழங்கப் பட்டு வருகிறது.

தினமும் 5 விமானங்கள் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றன. இந்நிலையில், தூத்துக்குடி-சென்னை இடையே இரவு நேர விமான சேவையை தனியார் விமான நிறுவனம் இன்று (29ம் தேதி) முதல் தொடங்குகிறது.

அதேபோல் இன்று முதல் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் விமான சேவையின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து காலை 8 மணிக்கு சென்னை புறப்படும் விமானம் காலை 8.10 மணிக்கும், காலை 11.25 மணிக்கு புறப்படும் விமானம் 12.05 மணிக்கும், 12.15 மணிக்கு புறப்படும் பெங்களூரு விமானம் மதியம் 1.10 மணிக்கும், மாலை 4.15 மணிக்கு புறப்படும் சென்னை விமானம் 4.10 மணிக்கும் புறப் பட்டு செல்லும் என அறிவிக்கப் பட்டுள்ளது. தற்போது மதியம் 1.50 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு செல்லக்கூடிய விமானம் இரவு நேர விமான மாக மாற்றப்பட்டுள்ளது.

அந்த விமானம் தினமும் சென்னையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு சென்னையை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் டிக்கெட் முன்பதிவு: இந்த இரவு நேர விமானத்தில் பயணிப்பதற்காக ஏராளமான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து உள்ளனர்.

SCROLL FOR NEXT