சிஎல்ஐஆர் நிறுவன நாள் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய அரசின் தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலர் அமர்தீப் சிங் பாடியா சிஎல்ஆர்ஐ ஆண்டறிக்கையை வெளியிட்டார். அருகில், சிஎல்ஐஆர் டைரக்டர் ஜெனரல் என்.கலைச்செல்வி, சிஎல்ஆர்ஐ இயக்குநர் பி.தணிகைவேலன், ஃபரீதா குழுமத்தின் தலைவர் ரபீக் அகமது, தென்மண்டல தோல் பொருட்கள் ஏற்றுமதி கவுன்சில் தலைவர் அப்துல் வஹாப், சிஎல்ஆர்ஐ மூத்த விஞ்ஞானி மாலதி ஜவஹர் ஆகியோர் உள்ளனர். படம்: ம.பிரபு

 
வணிகம்

தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்​தி​ய தோல் பொருட்​கள் ஏற்றுமதிக்கு பிரகாச​மான வாய்ப்பு

மத்திய தொழில் மேம்​பாட்​டுத்​ துறை செயலர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: மத்​திய அறி​வியல் மற்​றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்​ஐஆர்) 85-வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னை அடை​யாறு மத்​திய தோல் ஆராய்ச்சி நிறு​வனத்​தில் (சிஎல்​ஆர்ஐ) நேற்று நடை​பெற்​றது.

இதில் மத்​திய அரசின் தொழில் மற்​றும் உள்​நாட்டு வர்த்தக மேம்பாட்​டுத் ​துறை செயலர் அமர்​தீப் சிங் பாடியா பேசி​ய​தாவது: சிஎஸ்​ஐஆரின் கீழ் செயல்​படும் ஆய்​வகங்​களில் ஒன்​றான சிஎல்ஆர்ஐ நிறு​வனத்​தில் ஏராள​மான தோல் ஆராய்ச்​சிகள் நடை​பெற்று வரு​கின்​றன. புதிய தொழில்​நுட்​பங்​களும், புதுப்​புது தோல் பொருட்​களும் உரு​வாக்கப்​பட்டு வரு​கின்​றன.

உலகளவில் தோல் ​பொருட்​கள் தயாரிப்​பிலும், நுகர்​விலும் இந்தியா 2-ம் இடத்​தில் உள்​ளது. ஆனால், தோல் பொருள் ஏற்றுமதியில் 12-ம் இடத்​தில் இருக்​கிறோம். ஐரோப்​பிய நாடுகளுட​னும், இங்​கிலாந்து நாட்​டுட​னும் இந்​தியா தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் (எப்​டிஏ) செய்​துள்​ளது.

இதன் காரண​மாக இந்​தி​யா​வில் தோல்​பொருட்​கள் ஏற்​றும​திக்கு பிர​காச​மான வாய்ப்​பு​கள் உள்​ளன. ஏற்​றும​தி​யில் 12-வது இடத்திலிருந்து 2-ம் இடத்​துக்கு முன்​னேறும் அளவுக்கு நம்​மிடம் திறன்​கள் உள்​ளன என்றார்.

சிஎஸ்​ஐஆர் டைரக்​டர் ஜெனரல் கலைச்​செல்வி தலைமை தாங்கி பேசும்​போது, “சிஎஸ்​ஐஆர் கட்​டுப்​பாட்​டின் கீழ் சிஎல்​ஆர்ஐ உள்பட 37 ஆய்​வகங்​கள் இயங்கி வரு​கின்​றன. 1948-ல் நிறு​வப்​பட்ட சிஎல்​ஆர்ஐ சுதந்​திர இந்​தி​யா​வில் தொடங்​கப்​பட்ட முதல் 10 நிறுவனங்களில் ஒன்று என சிறப்பு வாய்ந்​தது. இந்​நிறு​வனம் தனது ஆராய்ச்சி பணி​கள் மூலம் சிஎஸ்​ஐஆர்-ஐ பெரு​மைபட வைத்​துள்​ளது.” என்​று குறிப்​பிட்​டார்.

SCROLL FOR NEXT