வணிகம்

சாம்சங் செமி கண்டக்டர் பிரிவு ஊழியர்களுக்கு தலா ரூ.3.25 கோடி போனஸ்

தொழிலாளர் யூனியனுடன் சாம்சங் நிறுவனம் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​சாம்​சங் நிறு​வனத்​தின் செமி கண்​டக்​டர் பிரி​வானது, தனது சிப் விற்​பனை மூலம் 49 மடங்கு கூடு​தல் வரு​வாயை கடந்த காலாண்​டில் ஈட்​டி​யுள்​ளது.

இதன் ​மூலம் நிறுவன ஊழியர்​களுக்கு தலா ரூ.3.25 கோடி போனஸ் வழங்க அந்​நிறு​வனம் ஒப்​புக்​கொண்​டுள்​ளது. இது தொடர்​பாக நடை​பெற்ற நிகழ்ச்​சி​யின்​போது, ஒப்​பந்​தத்​தில் நிறுவன உயர் அதி​காரி​களும், தொழிலா​ளர் யூனியன் நிர்வாகிகளும் கையெழுத்​திட்​டு உள்​ளனர். முன்​ன​தாக ஊழியர்களுக்கு நியாய​மான போனஸை வழங்​கா​விட்​டால், 18 நாள் ஸ்டிரைக் நடத்​து​வோம் என மிரட்​டல் விடுக்​கப்​பட்​டிருந்​தது.

இதனால் உலக நாடு​களுக்கு சிப் ஏற்​றுமதி பாதிக்​கும் என்​ப​தால் நிறு​வனம் போனஸ் வழங்க ஒப்​புக்​கொண்​டுள்​ள​தாகத் தெரியவந்துள்​ளது. இந்த போனஸை வழங்க நிறு​வனம் ஒப்புக்கொண்​டுள்​ள​தால் உலகின் மிகப்​பெரிய ஆலைகளில் ஒன்றில் வேலை நிறுத்​தப் போராட்​டம் நடக்​க​ இருந்​தது தடுக்கப்பட்டுள்ளது.

சாம்​சங் செமி கண்​டக்​டர் ஆலை​யிலுள்ள 78 ஆயிரம் ஊழியர்​கள் இந்த போனஸை பெறவுள்​ளனர். இது ஊழியர்​களுக்கு கிடைக்​கும் மிகப்​பெரிய போனஸ் தொகை​யாகப் பார்க்​கப்​படு​கிறது. 2026-ம் ஆண்​டில் நிறு​வனத்​தின் செயல்​பாட்டு லாபத்​தைக் கணக்​கில் கொண்டு இந்​தத் தொகை வழங்​கப்​பட​வுள்​ளது.

தென் கொரி​யா​வைச் சேர்ந்த சாம்​சங் நிறு​வனம், ஸ்மார்ட்​போன்கள் முதல் மின்​சார வாக​னங்​கள், சாட்​ஜிபிடி போன்ற சேவை​களை இயக்​கும் ஏஐ தரவு மைய சர்​வர்​கள் வரை அனைத்தி​லும் பயன்​படுத்​தப்​படும் மெமரி சிப்​களை தயாரித்து வழங்கி வரும் உலகின் மிகப்​பெரிய நிறு​வனங்​களுள் ஒன்று என்பது குறிப்​பிடத்​தக்​கது. சமீபத்​திய மாதங்​களில் மெமரி சிப்பற்றாக்​குறை​யின் காரண​மாக நிறு​வனம் ஏற்​க​னவே விலையை கடுமை​யாக உயர்த்​தி​யிருந்​தது.

SCROLL FOR NEXT