குருகிராம்: பிஎம்டபிள்யு எக்ஸ்1 லாங் வீல்பேஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் காரின் பெட்ரோல் வகை சென்னையில் உள்ள பிஎம்டபிள்யு குழும தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.
இதற்கான முன்பதிவு விநியோகஸ்தர்கள் மூலம் தொடங்கி உள்ளது. இதன் அறிமுக விலை ஜிஎஸ்டி உட்பட ரூ.49.9 லட்சம். சாலை வரி, டிசிஎஸ், ஆர்டிஓ வரி, காப்பீடு கட்டணம் தனி.
இதுகுறித்து பிஎம்டபிள்யு குழுமத்தின் இந்திய பிரிவு தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஹர்தீப் சிங் பிரார் கூறும்போது, “புதிய பிஎம்டபிள்யு எக்ஸ்1 வீல்பேஸ் கார் இந்தியாவில் மிகச்சிறப்பான வெற்றி வரலாற்றைப் படைத்திருக்கிறது. அதிக இடவசதி, கூடுதல் சவுகரியம், அதிநவீன தொழில்நுட்பம், கம்பீரமான தோற்றம் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பிரிவில் மிக நீளமான, மிக உயரமான மற்றும் அகலமான கார் என்ற தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. இது தவிர, பிஎம்டபிள்யு கார்களுக்கே உரிய செயல்திறன், ஓட்டுவதில் மகிழ்ச்சி ஆகிய அம்சங்களை தொடர்ந்து இது தக்கவைத்துக் கொண்டுள்ளது” என்றார்.