வணிகம்

புதிய கனரக பேருந்து - பாரத் பென்ஸ் அறி​முகம்

செய்திப்பிரிவு

சென்னை: ஜெர்​மனி​யின் டெய்ம்​லர் டிரக் ஏஜி நிறு​வனத்​தின் இந்​திய பிரி​வான டெய்ம்​லர் இந்​தியா வர்த்தக வாகன (டிஐசி​வி) தொழிற்​சாலை சென்னை அருகே ஒரகடத்​தில் அமைந்​துள்​ளது.

இங்கு கனரக லாரி மற்​றும் பேருந்​துகள் உற்​பத்தி செய்​யப்​படு​கின்​றன. இந்​நிலை​யில், பிபி1924 என்ற பெயரில் மேம்​படுத்​தப்​பட்ட பாரத் பென்ஸ் கனரக பேருந்தை டிஐசிவி அறி​முகம் செய்துள்​ளது.

இதுகுறித்து டிஐசிவி பேருந்து பிரி​வின் தலை​வர் அண்​ட​முத்து பொன்​னு​சாமி கூறும்​போது, “இந்​தி​யா​வில் வேக​மாக விரிவடைந்து வரும் நகரங்​களுக்கு இடையி​லான பயணி​கள் போக்​கு​வரத்தை மனதில் கொண்டு இந்த பேருந்து பிரத்​தேய​மாக வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மொத்த எடை 19,500 கிலோ ஆகும்.

இதில் ஓட்​டுநர், நடத்​துநர் உட்பட 51 பேர் பயணம் செய்​ய​லாம். பயணி​களின் பாது​காப்பை உறுதி செய்​யும் வகை​யிலும் அதிக எடையைத் தாங்​கும் திறன் மற்​றும் குறை​வான செல​வில் இயங்​கும் வகை​யிலும் வடிவ​மைக்​கப் ​பட்​டுள்​ளது. விற்​பனைக்கு பிந்​தைய சேவை சிறப்​பாக இருக்​கும்” என்​றார்.

SCROLL FOR NEXT