புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு (கல்வி) நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது.
அதில் கூறியிருப்பதாவது: "புதுச்சேரியில் உள்ள ஆரோவில் அறக்கட்டளையை ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்' என அங்கீகரிக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இதை 1966 முதல் யுனெஸ்கோ ஆதரித்து வருகிறது. அத்துடன் அதன் பங்களிப்பை அங்கீகரித்து பல தீர்மானங்களை யுனெஸ்கோ நிறைவேற்றி உள்ளது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு, 1988-ம் ஆண்டின் ஆரோவில் அறக்கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்'(ஐஎன்ஐ) என்பது நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட ஒரு முதன்மையான உயர்கல்வி அமைப்பாகும். இது முக்கிய துறைகளில் நிபுணர்களை உருவாக்குவதற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.