வணிகம்

96% ஊழியர்கள் கோடீஸ்வரர்கள் - ஆந்த்ரோபிக் நிறுவனம் ஐபிஓ சாதனை

600 பேரின் சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலரைத் தாண்டியது

செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: ‘கிளாட்’ ஏஐ சாட்பாட்டை உரு​வாக்​கிய ஆந்த்ரோபிக் நிறு​வனத்​தின் புதிய பங்கு வெளியீட்​டின் மூலம் (ஐபிஓ) அந்​நிறு​வனத்​தின் ஆயிரக்​கணக்​கான ஊழியர்​கள் ஒரே நாளில் கோடீஸ்வரர்​களாக மாறியுள்​ளனர்.

இது​குறித்து நிதி தொழில்​நுட்ப நிறு​வனமான ஹில்.காம் வெளியிட்​டுள்ள மதிப்​பீடுகளை மேற்​கோள்​காட்டி சிஎன்​என் வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: ஆந்த்ரோபிக் நிறு​வனத்​தின் ஐபிஓ மூலம் அந்​நிறு​வனத்​தில் பணிபுரியும் மொத்தமுள்ள 5,300 ஊழியர்​களில், சுமார் 5,100 பேரிடம் (96 சதவீதம்) 1 மில்​லியன் டாலருக்​கும் (சுமார் ரூ.9.25 கோடி) அதி​க​மான மதிப்​புள்ள பங்​கு​கள் உள்​ளன. அதேபோன்று, சுமார் 2,800 ஊழியர்​கள் (மொத்த ஊழியர்​களில் பாதிக்​கும் மேற்​பட்​டோர்) குறைந்​த​பட்​சம் 10 மில்​லியன் டாலர் மதிப்​புள்ள பங்​கு​களை வைத்துள்​ளனர்.

நிறு​வனர்​கள் அல்​லாத சாதா​ரண ஊழியர்​களில் சுமார் 600 பேரிடம் 100 மில்​லியன் டாலர் (சுமார் ரூ.925 கோடி) அல்​லது அதற்கு மேற்​பட்ட மதிப்​புள்ள பங்​கு​கள் உள்​ளன. அதாவது, நிறுவனத்​தின் ஒவ்​வொரு 9 ஊழியர்​களில் ஒரு​வர் 100 மில்​லியன் டாலர் சொத்து மதிப்​பைக் கொண்​டுள்​ளார்.

இந்த ஐபிஓ மூலம் ஆந்த்​ரோபிக் நிறு​வனத்​தின் 7 இணை நிறு​வனர்​களின் ஒட்​டுமொத்​தப் பங்கு மதிப்பு 139 பில்​லியன் டாலரைத் தாண்​டியுள்​ளது. குறிப்​பாக, ஆந்த்​ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி​யிடம் 20.07 பில்​லியன் டாலர் மதிப்​புள்ள பங்குகள் உள்​ளது. டாம் பிரவுன் 20 பில்​லியன் டாலர், சாம் மெக்​கண்ட்​லிஷ் 19.92 பில்​லியன் டாலர், கிறிஸ்டோபர் ஓலா 19.90 பில்லியன் டாலர், டேனியலா அமோடி (தலை​வர்), 19.76 பில்​லியன் டாலர் உள்​ளது.

இவர்​களைத் தவிர, நிறு​வனத்​தின் தலைமை நிதி அதி​காரி கிருஷ்ணா ராவ் வசம் சுமார் 788.3 மில்​லியன் டாலர் மதிப்​புள்ள பங்​கு​கள் இருப்​ப​தாக மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. ஏஐ தொழில்​நுட்​பத் துறை​யில் சிலிக்​கான் வேலி கண்ட மிகப்​பெரிய செல்வ உருவாக்க நிகழ்​வாக ஆந்த்​ரோபிக் ஐபிஓ மாறியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT