வணிகம்

அனைத்து வங்கிகளும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் 28 முதல் 30-ம் தேதி வரை நடை​பெற உள்ள 3 நாள் நாடு தழு​விய வங்கி வேலை நிறுத்​தத்​தையொட்​டி, வாடிக்கை​யாளர்​களின் வசதிக்​காக வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்​கி​களும் வழக்​கம்​போல் செயல்​படும் என மத்​திய நிதி அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

வாரத்​தில் 5 நாள் வேலையை அமல்​படுத்த வேண்​டும் என்​பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்​.26 முதல் கால​வரையற்ற வேலைநிறுத்தம் மேற்​கொள்​ளப்​படும் என வங்கிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வரும் 26, 27 ஆகிய தேதி​கள் வார இறுதி விடு​முறை நாட்​களாக இருப்​ப​தால், அதைத் தொடர்ந்து 3 நாள் வேலைநிறுத்​தம் நடை​பெறுகிறது.

இதனால் தொடர்ந்து 5 நாட்​களுக்கு வங்​கிக் கிளை சேவை​கள் பாதிக்​கப்​படும் நிலை ஏற்​படக்​கூடும். இதைத் தவிர்க்​கும் வகையில், வரும் ஞாயிற்​றுக்​கிழமையன்று (27-ம் தேதி) வங்​கி​கள் செயல்​படும் என மத்​திய நிதி​யமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

அன்​றைய தினம் அனைத்து பொதுத்​துறை வங்​கி​கள் மற்​றும் பிராந்​திய ஊரக வங்​கி​கள் செயல்​படு​வதற்கு இந்​திய ரிசர்வ் வங்கி ஒப்​புதல் அளித்​துள்​ளது. வங்​கிக் கிளை​கள், அலுவலகங்கள், ஏடிஎம் இணைப்பு கிளை​கள் மற்​றும் பணக் காப்பகங்களும் (Currency Chests) அன்று செயல்​படும்.

SCROLL FOR NEXT