வணிகம்

துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

சென்னை: மத்​திய துறை​முகங்​கள், கப்​பல் போக்​கு​வரத்து மற்​றும் நீர்​ வழித் துறை அமைச்​சகத்​தின் செயலர் விஜய்​கு​மார், நேற்று முன்​தினம் சென்னை துறை​முகத்​தின் உள்​கட்​டமைப்பு மேம்​பாட்​டுப் பணி​களை ஆய்வு செய்​தார்.

இதையடுத்து நடந்த கூட்​டத்​தில் கப்​பல் நிறு​வனங்​கள், சரக்கு ரயில் இயக்​குநர்​கள், முனைய இயக்​குநர்​கள் மற்​றும் வர்த்தக சங்​கப் பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​றனர்.

இதில், துறை​முகத்​தில் சரக்கு போக்​கு​வரத்து இணைப்பை வலுப்​படுத்​தும் நோக்​கில் சென்னை துறை​முகத்​துக்​கும், தொழில் நிறு​வனங்​களுக்​கும் இடையே 3 முக்​கிய புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

அதன்​படி, கன்​டெய்​னர் அல்​லாத சரக்​கு​களுக்​கான ஊக்​கத் திட்​டத்​தின் கீழ் அடுத்த 3 ஆண்​டு​களில் 10 லட்​சம் டன் உலர் சரக்​கு​களை கையாளுவதற்​காக ‘மின்​சோட்​ரான்​ஸ்’ நிறு​வனத்​துட​னும், தாய்​லாந்​தின் ரானாங் துறை​முகம் - சென்னை துறை​முகம் இடையே சரக்கு பெட்டக கப்​பல் சேவையை தொடங்​கு​வதற்​காக ‘டிசிஐ சீவேஸ்’ நிறு​வனத்​துட​னும் ஒப்​பந்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

மூன்​றாவ​தாக துறை​முகம் வழி​யாக ரயில் மூலம் சரக்கு பெட்​டகங்​களை கொண்டு செல்​வதை ஊக்​குவிக்க மத்​திய சேமிப்​புக் கிடங்கு கழகத்​துட​னும் ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இந்​நிகழ்​வில் சென்னை துறை​முகத்​தின் தலை​வர் சச்​சின் எஸ்​.குர்​வே, துணைத் தலை​வர் எஸ்​.​விஸ்​வ​நாதன், காம​ராஜர் துறை​முக நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் ஜே.பி.ஐரீன் சிந்​தியா உள்​ளிட்​டோர்​ உடனிருந்​தனர்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT