வணிகம்

விமானங்களில் விரும்பும் இருக்கைக்கான கட்டணத்தில் 60% இலவசம் உத்தரவை திரும்பப் பெற்றது மத்திய அரசு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: விமானங்களில் விரும்பும் இருக்கையைப் பெற இனி மீண்டும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். முன்னதாக அறிவித்த 60 சதவிகித இலவச இருக்கைகள் குறித்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

விமானப் பயணங்களுக்கான பயணச்சீட்டுகள் பெற்ற பின் அதற்கான விருப்பமான இருக்கை தேர்வுகளுக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. இந்தக் கட்டணம் ரூ.200 முதல் ரூ2,100 வரை என வசூலிக்கப்படுகிறது.

          

முன்புற இருக்கைகள் மற்றும் கால்களை நீட்டி அமர்வதற்கான கூடுதல் இட வசதி போன்ற வசதிகளுக்காகவே இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு இட்ட 60% இலவச இருக்கைகள் உத்தரவை தற்போது திரும்பப் பெற்றுள்ளது.

விமானப் போக்குவரத்து ஒழுங்கு முறை அமைப்பான டிஜிசிஏ-வால் வெளியான இந்த உத்தரவு ஏப்ரல் 20-ம் தேதி முதல் அமலுக்கு வரவிருந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு விமான நிறுவனங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தன.

இந்நிலையில், தனது அறிவிப்பை டிஜிசிஏ திரும்பப் பெற்றுக் கொண்டது. எனவே, விமானங்களில் விருப்ப இருக்கைகளுக்கான பழைய விதிமுறை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT