வணிகம்

அசாமில் அதானி நிறுவனத்தின் 3,200 மெகாவாட் மின் நிலையம்

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அசாம் மாநிலத்​தின் துப்ரி மாவட்​டம் சாபாரில் ரூ.48,000 கோடி முதலீட்​டில் அமைக்​கப்பட உள்ள 3,200 மெகா​வாட் அதானி பவர் அனல் மின் நிலை​யத்​துக்கு அம்​மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று அடிக்​கல் நாட்டினார்.

அசாம் மாநிலத்​தில் மின் பற்​றாக்​குறையைப் போக்கி ‘மின் உபரி மாநில​மாக’ மாற்​று​வதை நோக்​க​மாகக் கொண்ட இத்​திட்​டம், அல்ட்​ரா-சூப்​பர் கிரிட்​டிக்​கல்’ தொழில்​நுட்​பத்​துடன் நான்கு அலகு​களாக அமைக்​கப்​பட்டு டிசம்​பர் 2030 முதல் படிப்​படி​யாகச் செயல்​பாட்​டுக்கு வரும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இத்திட்டத்தில் 20,000 வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும்.

சாபார் அனல் மின் திட்​ட​மானது, அசாம் மாநிலத்​தில் மின்​சா​ரத் துறை​யில் அதானி குழு​மத்​தின் பெரிய அளவி​லான ரூ.63,000 கோடி முதலீட்​டுத் திட்​டத்​தின் முக்​கியப் பகு​தி​யாகும். இந்த மின் நிலை​யம் 2030-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் முதல் படிப்​படி​யாக இயக்​கத்​துக்கு கொண்டு வரத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்​மா, இத்திட்டம், அசாமின் மிகப்​பெரிய தனி​யார் முதலீடு​களில் ஒன்றாகும் என்று குறிப்​பிட்​டார்.

SCROLL FOR NEXT