வணிகம்

நாட்டிலேயே மிக நீளமான காற்றாலை இறக்கையைத் தயாரிக்கிறது அதானி குழுமம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​நாட்​டின் நீள​மான காற்​றாலை இறக்​கை​யை தயாரிக்க அதானி குழு​மம் திட்​ட​மிட்​டுள்​ளது.

குஜ​ராத்தின் முந்த்​ரா​வில் உள்ள தனது உற்​பத்​திப் பிரி​வில், அதானி நியூ இண்​டஸ்ட்​ரீஸ் நிறு​வனம் 91.2 மீட்​டர் நீளம் கொண்ட இந்​தி​யா​வின் மிக நீள​மான காற்​றாலை இறக்​கைகளைத் தயாரிக்க திட்​ட​மிட்​டுள்​ளது. இவை குறைந்த, நடுத்தர காற்று வீசும் இடங்​களில் மின் உற்​பத்​தியை மேம்​படுத்த வடிவமைக்கப்பட்ட அடுத்த தலை​முறை காற்​றாலைகளில் பயன்படுத்​தப்​படும்.

          

முந்த்ரா ஆலை தற்​போது 78.6 மீட்​டர் மற்​றும் 80.5 மீட்​டர் நீள​முள்ள இறக்​கைகளை உற்​பத்தி செய்து வரு​கிறது. புதிய 91.2 மீட்​டர் இறக்​கை​யானது வடிவ​மைப்பு சிக்​கல், பொருட்​கள் பொறி​யியல் மற்​றும் உற்​பத்​தித் திறனில் ஒரு குறிப்​பிடத்​தக்க முன்னேற்றத்தைக் குறிக்​கிறது. இந்த 91.2 மீட்​டர் இறக்கை ஒரு கால் ​பந்து மைதானத்​தின் நீளத்​துக்கு இணை​யானது.

அல்​லது 30 மாடி கட்​டிடத்தை விட உயர​மானது. இது சுமார் 185 மீட்டர் விட்​டம் கொண்ட சுழற்சி பரப்பை உரு​வாக்​கும். முந்த்ரா ஆலை​யின் தற்​போதைய உற்​பத்​தித் திறன் ஆண்​டுக்கு 2.25 ஜிகா​வாட்ஸ் ஆகும். இதை படிப்​படி​யாக 10 ஜிகா​வாட்​ஸாக ஆக உயர்த்த அதானி குழு​மம் திட்​ட​மிட்​டுள்​ளது. காற்​றாலை உற்பத்திக்​காக இது​வரை ரூ.3,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT