கோப்புப்படம் 
வணிகம்

கடந்த 9 ஆண்டுகளில் ராணுவ தளவாட ஏற்றுமதி 23 மடங்கு உயர்வு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராணுவ தளவாட ஏற்றுமதி 2013-14-ம் நிதி ஆண்டில் ரூ.686 கோடியாக இருந்த நிலையில் 2022-23-ம் நிதி ஆண்டில் ரூ.16,000 கோடியாக உயர்ந்துள்ளது. ராணுவ தளவாட ஏற்றுமதி 9 ஆண்டுகளில் 23 மடங்கு அதிகரித்துள்ளது. 85-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் ராணுவ தளவாட ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக ஏற்றுமதி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டன. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே ராணுவத் தளவாடங்களை வடிவமைத்து தயாரிக்க ஊக்குவிக்கப்பட்டது. இதனால், ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT