வணிகம்

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.296 கோடி

செய்திப்பிரிவு

சென்னை: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் 31 தேதியுடன் முடிவடைந்த 4-வது காலாண்டு மற்றும் நிதியாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நிதிநிலை அறிக்கையின்படி நிறுவனத்தின் கடன் அனுமதி அளவு ரூ.3,232 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.1,880 கோடியாக இருந்தது. இது 72 சதவீத வளர்ச்சியாகும்.

அதேபோல கடந்த ஆண்டில் ரூ.1,769 கோடியாக இருந்த கடன் வழங்கல் அளவு 65 சதவீதம் உயர்ந்து தற்போது ரூ.2,919 கோடியாக உள்ளது. மொத்த வருவாய் ரூ.1,299 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ.1,307 கோடியாக இருந்தது.

நிகர வட்டி வருவாய் 4.8 சதவீதம் அதிகரித்து ரூ.583 கோடியாக உள்ளது. நிகர லாபம் ரூ.191 கோடியிலிருந்து தற்போது ரூ.296 கோடியாக உயர்ந்துள்ளது. கடன் பரவல் 3.3 சதவீதமாக உள்ளது.

வாராக்கடன் அளவு கடந்த 2022 மார்ச் 31-ல் ரூ.820 கோடியாக இருந்த நிலையில், 2023 மார்ச் 31-ல் ரூ.719 கோடியாக குறைந்தது.நிறுவனத்துக்கு 2023 மார்ச் 31 நிலவரப்படி தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள், புதுச்சேரியில் 159 கிளைகள், 33 சாட்டிலைட் மையங்கள் உள்ளன.

SCROLL FOR NEXT