வணிகம்

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 30 கோடி

செய்திப்பிரிவு

இந்தியாவில் மிகப் பெரிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 30 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிறுவனத்தின் செல்போன், தரைவழி இணைப்பு, டிஎஸ்எல் மற்றும் டிடிஹெச் சேவை மூலமான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 30 கோடியைக் கடந்துள்ளாக நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்நிறுவன வாடிக்கையாளர்களாக ஒரு கோடிக்கும் அதிகமானோர் சேர்ந்துள்ளனர். சர்வதேச அளவில் நான்காவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம் ஆசியா, ஆப்பிரிக்கா உள்பட 20 நாடுகளில் செயல்படுகிறது. 2012-ம் ஆண்டிலிருந்தே 4-ஜி சேவையை இந்நிறுவனம் அளித்து வருகிறது.

SCROLL FOR NEXT