புதுடெல்லி: அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்ட அறிக்கையின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர்கள் அடங்கிய
சிறப்பு விசாரணை குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
அதன்படி அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர் பாக அந்த குழு விசாரணை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் சமர்ப்பித்தது.
குறிப்பாக, ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்றான, அதானி நிறுவனம் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக நிபுணர் குழு விசாரணை மேற்கொண்டது.
முதல் கட்டமாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதானி குழுமம் அதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதற்கான எந்தவிதமான முகாந்திரமும் கண்டறியப்படவில்லை என நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
மேலும், சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியின் தரப்பில் எந்த ஒழுங்குமுறை தோல்வி ஏற்பட்டது என்று முடிவு செய்யவும் முடியாது. அதானி குழுமம் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அது இடர்பாடுகளை தணிக்க எடுத்த நடவடிக்கைகள், பங்கு களின் மீதான நம்பிக்கையை வளர்க்க உதவியதாக அக்குழு தெரிவித்துள்ளது. மேலும், பங்குகளின் விலை தற்போது நிலைப்பெற்றுள்ளதாகவும் நிபு ணர் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.